பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

image
13.03.2023

8. கெட்டமரம், நல்ல மரமாய் மாறும் சுவிசேஷம்!

தான் உடைத்தால் “பாத்திரம் தவறி விழுந்துவிட்டது!” என்றும் பிறர் உடைத்தால் “பாத்திரத்தை உடைத்துவிட்டான்” எனவும் குற்றம் கூறும் கொடிய சுபாவம் கொண்டவர்கள் நாம். ஆம், நம் யாவருடைய இருதயமும் பொல்லாத இருதயம்தான்! “நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை!” (ரோமர் 3:12) எனற் தேவ வார்த்தையை யார் மறுக்க முடியும்?   பிறரைத் தீமை பேசக்கூடாது என்பது மாத்திரமே சுவிசேஷம் இல்லை! பிறரின் நன்மை ஒன்றே பேச பேச வேண்டும் என்பதில்தான் இயேசுவின் நற்செய்தி அடங்கியிருக்கிறது. சொந்தப் பிள்ளைகளைக் கூட “நாய், பன்றி..... சனியன்” என்றும், சொந்த சகோதரனை “மூடன்” என்றும் பேசும் திருக்கு நெஞ்சம் கொண்டதுதான் நம்  இருதயம். Make the tree good - மரம் நல்லதாய் மாறினால்” நல்ல கனி தரும்! நல்லவை பேசும்! (மத்தேயு 12:33). பரிசுத்த ஆவியின் துணையோடு தன் ‘வேராய் இருக்கும்’ இருதயத்தில் கோடாரி வைத்தவனின் மரம் நல்லதாய் மாற்றமடையும்! இவ்வாறு, தன் உத்திரத்தை அகற்ற தீவிரித்தவன், பிறர் குறையாகிய “துரும்பை” விரல் நீட்டி தீமைபேசிட அஞ்சி நிற்பான்!   யாதொருவன் தன் ‘இருதயம் நொறுங்கி’ ஆண்டவரிடம் வருகிறானோ, அவனையே அவர் காயம்கட்டி சுகமாக்குகிறார்! இருதயத்தை நல்லதாய் மாற்றுகிறார்! (சங்.147:3). 

                                                                                                                                               - ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!