பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

17.03.2025

11. ‘கிறிஸ்தவ விசுவாசம்’ உலகத்தாரின் பக்தியைவிட மேலானது!

  வாழ்க்கையின் முன்னேற்றத்தை ‘பக்தி மார்க்கம்’ என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. அவபக்தர்களான அநேகர், மேலான பதவிகளிலிருந்து செல்வமாய் வாழுகிறதைக் காண்கிறோமே! மிஷனெரிமார் ஊழியம் இந்த புறம்பான சீர்திருத்தங்களோடு முடிந்து போவதில்லை. நம் இரட்சகர், இந்தப் புறம்பான அந்தஸ்தையும் நாகரீகத்தையும் கொடுக்கும்படி தமது ஜீவனை விட்டவரல்ல! ஓர் சமயம் ஒரு பிராமண உத்தியோகஸ்தரிடம் கிறிஸ்துவைப் பற்றிப் பேசினபோது, அவர்: “எங்களுக்கேன் உபதேசிக்கிறீர்கள்? பகவான் செயலால் எங்களுக்கு ஒரு குறைவுமில்லை! அந்தத் தாழ்ந்த வகுப்பாரை வேதத்தில் சேர்த்து, அவர்களை முன்னுக்குக் கொண்டு வாருங்கள்” என்றார். அவர் கண்ட கிறிஸ்து மார்க்கம் அவ்வளவு தான்! அவரைப்போலவே அநேகர் நினைக்கிறார்கள். 

  வேதத்தில் சேர்ந்தால் படிப்பு, உத்தியோகம், பிழைப்பு, கலியாணம் நடக்கும் என்று பொதுவாய் பேசிக்கொள்கிறார்கள்! அவைகளல்ல, அவைகளைப் பார்க்கிலும் மேலான பரலோக தெய்வ ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறோம் என்று காட்ட வேண்டியதே நமது கடமை!

 - ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!