பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!


05.08.2024

32. தேவ அன்பு ‘ஓர் வெள்ளம்’ இதயம் திறவுங்கள் பாய்ந்து நிரப்பும்!

 தேவன் தம்முடைய அன்பினால் நம்முடைய இருதயத்தை நிரப்புவதற்கு விருப்பமில்லாதிருப்பது போல.... “தேவ அன்பு என் உள்ளத்தில் நிறையட்டும்!” என்ற முடிவில்லாத ஜெபத்தை நாம் செய்திட வேண்டியதில்லை! ஆம், எவ்வாறு திறந்து வைக்கப்பட்ட ஒரு அறையில் சூரியஒளி பாய்ந்து நிரப்புகிறதோ! அதுபோலவே, நம்முடைய இருதயத்தை தம்முடைய அன்பினால் நிறைத்து விடுவதற்கும் தேவன் மகாவிருப்பம் கொண்டுள்ளார்!

 நாம் சுவாசிக்கும் காற்று நம்மைச் சுற்றிலும் சூழ்ந்து நெருங்கி இருப்பதைப்போலவே, தேவ அன்பும் நம்மைச் சூழ்ந்து எப்போதும் நெருங்கியே நிற்கிறது. அந்த அன்பு உள்ளே பிரவேசிக்க முடியாமல், கதவை மூடி தடை செய்யாதிருங்கள்! நீங்கள் மாத்திரம் தடைகளை அகற்றி கதவைத் திறந்து விட்டால், தேவ அன்பின் வெள்ளம் உங்கள் உள்ளம் புளகாங்கிதம் அடையும்படியாக இதயத்தை நிறைத்து விடுவதைக் காண்பீர்கள்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!