அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
மானிட வாழ்க்கை ஓர் நீண்ட பயணம் கொண்டதேயாகும்! துன்பங்கள், வேதனைகள், போட்டிகள், பொறாமைகள், கசப்புகள் என பல்வேறு விதமாய் இந்தப் பயணத்தில் மானிடர்கள் தாக்கப்பட்டு களைத்துப் போய் நம்மிடம் வருகிறார்கள்!
இவர்களின் களைப்பைப் போக்கிட தேவையானது அப்பமும் அல்ல, மீனும் அல்ல, முட்டையும் அல்ல! ஆம், இவர்களின் களைப்பை போக்கிட “அன்பே” தேவை நிறைந்ததாய் இருக்கிறது! அப்பமோ, மீனோ...... இப்பூமியில் எப்படியாவது பெற்று அவர்களுக்கு தந்துவிடலாம். ஆனால், “பரிசுத்தாவியின் அன்பை” தேவா! நீரே எனக்குத் தரவேண்டும் என்பதே நமது தவிப்பாய் எந்நாளும் இருந்திட வேண்டும்! (லூக்கா 11:6,13).