பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

15.10.2026                                                    42வது வாரம்

‘தேவனை மாத்திரமே’ உயர்த்தும் தாசர்களை தொடர்ந்து அபிஷேகிக்கிறார்!

 இயேசு பரிசுத்த ஆவியின் அதிக வல்லமையினால் நிரப்பப்பட்டார் எனக் கூறிய நிகழ்ச்சி எது தெரியுமா? அவர் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுத்தபோதுதான் பரிசுத்தஆவி வல்லமையினால் நிரப்பப்பட்டார்! ஒருவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது, அவரை தண்ணீருக்குள் தாழ இறக்கி முற்றிலும் தண்ணீருக்குள் அவர் மறைந்தால் மாத்திரமே ஞானஸ்நானத்திற்கு அர்த்தம் உண்டு!

 நல்ல ஆவிக்குரிய மிஷனெரி புத்தகங்களை நீங்கள் வாசித்துப் பார்த்தால், அந்த புத்தகங்களில் இயேசு மாத்திரமே உயர்ந்திருப்பதை காண்பீர்கள். சில சமயங்களில், அந்த மிஷனெரிகளின் பெயர் கூட நம் மனதில் தங்குவதில்லை!

 இன்றும் யாரெல்லாம், “தேவனை மாத்திரமே உயர்த்தி” தங்களை மறைத்துக் கொள்கிறார்களோ, அவர்களையே ஆண்டவர் தன் இடைவிடா அபிஷேகத்தால் தாங்குவார்! தன்னையோ, தன் உபதேசத்தையோ அகங்காரமாய் உயர்த்தி காண்பிப்பவர்களிடம், தேவன் தன்னுடைய தொடர்ச்சியான அபிஷேகத்தைத் தந்து தாங்குவதில்லை! இக்கொடிய நாட்களில் “அபிஷேகம்” இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை! ஊழியம் செய்வதும் சாத்தியமில்லை!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!