அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
வசந்தம் இல்லை! பலனும் இல்லை! தானிய விளைவும் இல்லை! என “இல்லை.... இல்லை” என்ற வாழ்வின் கடினமே எனது உயரமான ஸ்தலம் - ஆலு ழஐழுழ ழஐடுடுளு என ஆபகூக் கண்டார்! அவைகளைக் கடந்து சென்றிட கர்த்தரால் கட்டளையிடப்பட்ட ஆபகூக், ‘தன்னால் அது முடியாது’ என அறிந்து, தன் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூர்ந்தார்! ஆ, இது ஆச்சரியம்.... என் கால்களை உயர் குன்றுகளில் பாய்ந்து நடக்கும் “மான் கால்களைப்” போலாக்கினார்! என்னை நடக்கப் பண்ணினார்! என மகிழ்ந்து கூறினார் (ஆபகூக்.3:17-19). ‘இது ஆபகூக் ஒப்புவித்த சங்கீதம்’ என 19-ம் வசனம் கூறுகிறது! அன்று, ‘பாமாலை பாடி’ கொல்கொதா குன்றில் ஏறி வெற்றி சிறந்த இயேசுவின் அடிச்சுவடு, இன்று நம்மையும் அவர் சுவடு பின்பற்ற அழைக்கிறது!