அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
நீங்களும், உங்கள் குடும்பமும் “தெய்வ கிருபையில் பெருகி வாழ்ந்திட” 2கொரிந்தியர் 9:8, கற்றுத்தருகிறது: தான் பெற்ற சுவிசேஷத்தை மகிழ்வுடன் பிறருக்கு ஆசீர்வாதமாய் கொடுத்தவர்கள், ‘எல்லாவற்றிலும் எப்பொழுதும்’ சம்பூரணமுடையவர்களாய் இருப்பார்கள்! என்றும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுவார்கள்! என்றும், வல்ல தேவன் அவர்களிடத்தில் சகலவித கிருபைகளையும் பெருகச் செய்வார் என்றும் இந்த வசனம் பூரிப்புடன் கூறி நம்மை ‘சுவிசேஷப் பணிக்கு’ உந்திச்செல்ல உற்சாகமளிக்கிறது! இதை அறிந்த கொரிந்திய ஜனங்கள் “கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கீழ்ப்படிதலுடன் அறிவித்தார்கள்!” (13-ம் வசனம்) என கூறும் கீழ்ப்படிதல் நம் குடும்பத்திலுள்ள சபையிலுள்ள யாவருக்கும் நிறைவேற தேவன் கிருபை செய்வாராக! இங்கு நீங்கள் எச்சரிக்கையாய் கேட்க வேண்டிய முக்கியமான செய்தி என்னவென்றால்: “சுவிசேஷம் பெறாத தரித்திரர்களுக்கு, வாரியிறைத்து கொடுத்தபடியால், அவனுடைய நீதி நிலைநின்றது!” என்ற பாக்கியம்தான்! (2கொரி.9:9). கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கும் பாக்கியம், நம் யாவர் குடும்பத்திற்கும் உண்டாவதாக!