பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

08.09.2025

36. கர்த்தரால் பரீட்சிக்கப்படுவோர், பாக்கியவான்கள்!

  ல்தேயர் தேசத்தின் ஊர் என்ற இடத்தைவிட்டு தேவன் புறப்படச் சொன்னபோது, தான் சோதிக்கப்படுகிறேன் என ஆபிரகாம் அறியவில்லை. அதேபோல், உன் ஏக புத்திரனை மோரியா மலையில் பலியிடு! என ஆண்டவர் ஆபிரகாமிடம் கூறியபோதும், தான் கீழ்படிவதற்கே கட்டளையிடப்பட்டதாக எண்ணினார்! ஆனால், தான் தேவனால் சோதிக்கப்படுவதாக சிறிது கூட அறியவில்லை. அதுபோலவே, தான் சோதிக்கப்படுவதை அறியாமலே பேதுரு சோதிக்கப்பட்டார்! பவுலும் அவ்விதமாகவே சோதிக்கப்பட்டார்! நாம் ஒன்றன்பின் ஒன்றாக ஏராளமான சத்தியங்களை அறிந்து கொண்ட பிறகு, பரிசுத்த ஆவியானவர் உறுதிபட கூறுவது என்னவென்றால், “இன்றுமுதல், இந்த மனுஷனுக்கு, நான் பரீட்சை நடத்துவேன்!” என்பதுதான். ஆகவே, நான் கர்த்தரால் பரீட்சிக்கப்படும் பாக்கியம் பெற்றவன்! என உணர்ந்து ஜீவித்திடக்கடவோம்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!