அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
“தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்கிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்” என்றே இயேசு ஆராதனையின் கோட்பாட்டை வரையறுத்தார் (யோவான்4:24). நொறுங்குண்ட மனிதனிடமிருந்தே ‘ஆவியின் கசிவு’ ஏற்படும்! அங்கு தான் அவன், ஆவியாயிருக்கும் தேவனிடம் ஒன்றறக் கலந்து தொழுகையின் பாக்கியம் பெறுகின்றான். “உள்ளத்தில் பகை வைப்பதே மனுஷ கொலைபாதாகம்!” என்ற கற்பனையை பெற்ற அன்பின் சீஷனே, தன் தோல்வியில் அவர் பாதம் ஓடி, மனந்திரும்பி அழுதிடும் பாக்கியம் பெறுகிறான்!! “தன் மனைவியினிடத்தில் ஒருமுறை கூட கசந்து கொள்ளாதிருங்கள்” (கொலோ.3:19) என கட்டளை பெற்ற அவன், எத்தனை முறை அவர் பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தும் நிலை ஏற்படுகிறது! இந்த அன்பின் சோகத்தில், நொறுங்குண்டு கசிந்திடும் அவனது ஆவி, இப்போது ஆவியாயிருக்கும் தேவனை சந்தித்து “அவரது ஆவியில்” ஒன்றற கலந்துவிடுகிறானே! அதுவே “ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளும் பாக்கியம்!” (யோவான் 4:24). இந்த பாக்கியத்தை கண்டடைந்தவனே “.... பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பமில்லை” என நிஜமாய் கூறிடுவான் (சங் 73:25).