அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
‘தாழ’ குதியுங்கள்! அப்போது தூதன் உங்களைத் தாங்குவார்! என்ற குரல், வசனத்திற்கு ஒப்பான தூதனின் குரல்போல இருந்தாலும், அது சாத்தானின் குரல்! (லூக்கா 4:9-11). சுயாதீனமாய் ‘தன்னைத் தானே தாழ்த்தும்’ கௌரவமே தேவன் நமக்கு அளித்துள்ளார்! உங்களின் சுயாதீனமான தாழ்மையை யாரும் பறித்து, உங்களை ‘தாழ்வு மனப்பான்மைக்குள்’ தள்ளிவிடாதிருக்க கவனம் கொள்ளுங்கள்! உலக மாந்தர்களை “தாழ்வு மனப்பான்மை” குழிக்குள் தள்ளி, பல்லாயிரம் மக்களை ‘மன நோயாளியாய்’ மாற்றியுள்ளான் இந்த கொடிய இருளின் அதிபதி! இன்னும் அதிகமாய், எண்ணற்ற மக்களை ‘தற்கொலை’ செய்திடவும் வைத்து விட்டான், இந்த கயவன் பிசாசு! இன்னும் ஒருபடி அதிகமாய், சபையிலுள்ள ‘மாசற்ற வாழ்க்கை’ வாழத் துடிக்கும் இயேசுவின் சீஷர்களை, அவரின் மெய் பக்தர்களை “நீ இப்படி ‘தாழ’ குதித்து விட்டால், ‘கிருபை’ வெளிப்பட்டு, உன்னை உயர்த்திவிடும்!” என, பொய் கிருபை காண்பித்து, அவர்களை ஆசீர்வதிக்கப்பட்ட ‘தாழ்மைக்குள்’ அல்ல, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுபவர்களையும் இனம் கண்டு விலகியிருப்போமாக!