அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

03.08.2026 துளிகள் - 31
‘அவதூறு செய்தி’ கேட்டு, நம்பி, அதை பரப்புவது தீமை!
அன்பையும் நட்பையும் பாதுகாத்துக் கொள்வதற்கு, சாக்ரடீஸ் ஞானி கடைப்பிடித்த “அவதூறு கேட்க மறுக்கும்” அவரது பண்பு, நம் யாவருக்கும் நல்லதொரு மாதிரியாய் விளங்குகிறது! ஒருநாள், சாக்ரடீசுக்கு அறிமுகமான ஒருவர், சாக்ரடீசை சந்தித்து “சாக்ரடீஸ், உன்னுடைய நெருங்கிய நண்பன் புளூட்டோவைக் குறித்து ‘சேதி’ ஒன்று கேட்டேன்?” எனக் கூறியபோது.... அதை கவனித்துக் கேட்ட பின்பு, ‘சற்று பொறுங்கள்!’ எனக் கூறிய சாக்ரடீஸ், “அன்பானவரே நீங்கள் சொல்ல வந்த சேதி 1) உண்மையானதாகவும் தெரிய வில்லை! 2)நன்மையானதாகவும் தெரியவில்லை! குறைந்தது 3)பயனுள்ளதாய் இருக்கிறதா..... அதுவும் இல்லை! பின் ஏன் எனக்கு அன்பாயிருக்கும் நண்பனைக் குறித்த ‘அவதூறான’ சேதியை சொல்ல வேண்டும்?” என முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இவ்வித உத்தம குணம் கொண்ட சாக்ரடீஸிடம், அவரது நண்பனாகிய புளூட்டோவை பற்றி அநேகர் கூறவந்த அவதூறை, “அந்த அவதூறு என்ன சேதி?” என சாக்ரடீஸ் கடைசி வரை கேட்கவோ அல்லது அதை அறிந்து கொள்ளவோ இல்லை!
- ரத்னம்
