அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

15.12.2025
50. ‘கிறிஸ்து’ தேவன் அருளிய மாபெரும் ஈவு!
கிறிஸ்து நமக்கு அருளப்பட்டார்! அந்த மாபெரும் தெய்வ ஈவை “பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்க காண்பீர்கள்!” இதுவே இன்றும் நமக்கு அடையாளம்! (லூக்.2:12). இது நமது மாறாத அடையாளமாய் இருப்பது, இந்த பூமி வாழ்விற்கு போதும்! இனி, தூதன் முழங்கும் 1) தேவ நாமம் நம்மூலம் மகிமைப்படும் 2) பூமியில் நம் குடும்பத்தில் சமாதானம் 3) எந்த மனுஷரிடத்திலும் அன்பு! நிலைத் தோங்கிடும்! (லூக்கா 2:12-14).
- ரத்னம்
