அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

14.04.2025
15. ‘தொழுகையின் உசிதம்’ கண்டதுண்டோ?
தன் மன கிலேசத்தில், “என்ன நடந்தது? ஏன் நடந்தது?” என்றெல்லாம் கேள்வி கேட்காமல் “நம் தேவனுக்கே சகல ஞானமும், சகல துதியும் என்றென்றும் உண்டாவதாக!” என கர்த்தருடைய பாதத்தை தொழுது இறுகப் பிடித்துக்கொண்டார்.
இடைவிடாது ஜெபிக்கும் இரகசியத்தைப் புரிந்து கொண்ட எந்த பக்தர்களும் “இடைவிடாது கர்த்தரை தொழுது கொள்ளும் மேன்மையை” நிச்சயமாய் கண்டடைந் திருப்பார்கள்! நம் வாழ்வின் எல்லா சோதனைகளிலும், தேவைகளிலும், ஜெபித்து முன்னேறும் யாவருக்கும் இந்த இனிமையான ‘இடைவிடாத தொழுகையின் பாக்கியம்’ கிட்டுவதாகும். கர்த்தருடைய பாதத்தைத் தொட்டு தொழுதிடும் பாக்கியம் இன்னதென்று அறியாத நாம்..... இப்போதோ, “தொழுகையே எல்லாம்!” என்ற புனித எல்லையை இந்த பூமியிலேயே கண்டடைகிறோம். ஆம், அது ஒன்றே கிறிஸ்தவ வாழ்வில் நாம் பெற்ற பாக்கியம்!
- ரத்னம்
