அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
“இவ்வளவு பெரிய கல்லை நமக்காக யார் புரட்டித் தள்ளுவார்கள்?” என அன்று மனம் துவண்ட ஸ்திரீகளைப்போலவே, இன்றும் தங்கள் வாழ்வில் தடையாயிருக்கும் “பெரிய பிரச்சனைகளை” வைத்து கலங்குவோர் ஏராளமாய் இருக்கிறார்கள்! இங்குதான், மகிழ்வூட்டும் நற்செய்தியாய் “அவர் உயிர்த்தெழுந்தார்!” என அவர்களுக்கும், நமக்கும் அறிவிக்கப்பட்டது! (மாற்கு 16:1-6). என்ன ஆச்சரியம், கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசுவின் பிரசன்னத்தைக் கண்டதும் “அடைத்திருந்த பெரிய கல் (Large Stone)” புரண்டு விழுந்தது! பார்த்தீர்களா, அவரது உயிர்த்தெழுந்த வல்லமையை! ‘பூட்டிய கதவுகள்’ போன்ற சூழ்நிலை பயத்தில் சோர்வுற்ற 11-சீஷர்கள் நடுவில் இயேசு நின்று “உங்களுக்குச் சமாதானம்!” என கூறினாரே, அது எப்படி? (யோவான் 20:19). ஆம், பூட்டிய கதவுகளோ அல்லது புரட்ட முடியாத பெரிய கல்லோ ஆகிய எதுவானாலும் ‘உயிர்த்தெழுந்த இயேசு’ அங்கு வந்துவிடுவார்! தன் வல்லமையால், அதிசயங்கள் செய்வார்! நாமோ, உயிர்த்தெழுந்த இயேசுவை ‘நாம் காணாத அவரின் உயிர்த்தெழுந்த பிரசன்னத்தை விசுவாசித்திட வேண்டும், அவ்வளவுதான்!’ அவ்வாறு கர்த்தரைத் தேடும் யாவருக்கும், அன்றுபோல் இன்றும், ‘உயிர்த்தெழுந்த இயேசு’ வந்து, பலன் அளிப்பார்!
- ரத்னம்