அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
வனாந்திரத்தில் ‘மூன்று நாள் மாத்திரம்’ இயேசுவோடு தங்கியிருந்த வர்களின் பசி அறிந்து, அவர்களை அப்பத்தால் திருப்தியாக்கினார்! (மத்.15:22). “நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” என்ற இயேசுவின் விருப்பம் அறிந்து, அவர் தங்கும்படி ‘மனந்திரும்பி ஒப்புரவாகி’ தன் இல்லம் திறந்தான் சகேயு! (லூக்கா.19:5). “உம்மைப் பின்பற்ற” எல்லா வற்றையும் விட்டோம்! என்றார் பேதுரு (மாற்கு.10:28). “தங்களை விட்டு போய்விடுவாரோ!” என அஞ்சி “எங்களோடு தங்கியிரும்” என வருந்திக் கேட்டனர் எம்மாவு சீஷர்கள்! (லூக்கா.24:29).
‘எதையும் இழப்போம்’ ஆனால், அவர் சமூகம் ஒன்றே பாக்கியம்! என அவரை விட்டு நீங்காத ஜனமே, அவரது சொந்த ஜனம்!