அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

21.07.2025
29. ‘ஒன்றும் இல்லாமையிலும்’ அமைதி காணும் ஜீவியம்!
பவுல் கூறினார் “ஒன்றும் இல்லாதவர்களென எண்ணப்பட்டாலும் சகலத்தையும் உடையவர்களாகவே எங்களை விளங்கப்பண்ணுகிறோம்” என கெம்பீரமாய் கூறினார் (2கொரிந்தியர் 6:10). யாரால் இப்படி கூற முடியும்? ஒருவனுக்கு பணம் இருந்தால் மாத்திரமே, வங்கியில் சென்று பணம் எடுத்து வர அமைதியாய் இருப்பான்! ஆனால் ‘ஒன்றுமில்லாமலே’ சகலமும் இருப்பதைப்போல் அமைதி காணும் ஓர் நிலை, ஆசீர்வதிக்கப்பட்ட நிலையாகும்! இதுபோன்ற ஒப்பற்ற நிலை, தேவபக்தியில் மிகுந்த பலன் கண்டவர் மாத்திரமே கெம்பீரித்திட முடியும்!
- ரத்னம்
