அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

23.02.2026 துளிகள் - 8
பரிசுத்தவான்களின் சுதந்திரத்தில் நாமும் பங்கடைவோம்!
வேதாகம நாட்களிலோ அல்லது, திருச்சபை சரித்திரத்திலோ கர்த்தருடைய பிரகாசமான தேவ பக்தர்களின் வாழ்க்கை சரிதைகளை உற்று நோக்குங்கள். மோசே, தாவீது, தானியேல், ....போன்ற கர்த்தருடைய தாசர்களைக்குறித்து எழுதியிருப்பதைப் பாருங்கள். மேலும் பவுல், மார்டின் லூத்தர், கிரன்மெர், ரிட்லி, பிராட்ஃபோர்ட் போன்ற திருச்சபை சீர்திருத்தவாதிகளைக் கவனித்து வாசியுங்கள்! ஒயிட்ஃபீல்ட், சிசில், வென், மச்செயின், பிக்கர் ஸ்டெட்ச், ஜான் வெஸ்லி..... போன்ற தேவபக்தியான மக்களின் தியான வாழ்க்கைகளைக் கூர்ந்து நோக்குங்கள். இவர்கள் யாவரைப்பற்றியும் மிகவும் துலாம்பரமாகத் தப்பாமல் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு வார்த்தை என்னவெனில் “ஆண்டவர் இயேசு ஒரு ஜெப மாந்தன்” என்பதுதான்! ‘மலர்’ என்பது ஒன்றாயிருந்தாலும், அதில் எத்தனை ரகங்கள், மணங்கள்! அதுபோலவே, தேவன் ‘பரிசுத்தவான்களின்’ சுதந்திரத்தில் மகிழுவது போல, நாமும் நம்மால் முடிந்தவரை அறிந்த பரிசுத்தவான்களின் சுதந்திரத்தை அவர்களை கவனித்து, வாசித்து “ஐசுவரியம்” காணக்கடவோம்! (எபேசியர் 1:18).
- ரத்னம்
