22.07.2024
30. கிறிஸ்துவுக்குள் கனிகொடுக்கும் இரகசியம்!
கொடியின் வேலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: அது, செடியைப் பூரணமாகச் சார்ந்து பிழைக்கிறது! தனக்குக் கிடைக்க வேண்டிய சாரத்தைக் குறித்து அது கவலைப்படுகிறதில்லை. தான் வளர வேண்டுமே என்று கலங்குவதில்லை. தான் கனிகொடுக்க வேண்டுமே என்று பிரயாசப்படுவதில்லை! அந்த கவலை யாவும் செடிக்குரியது! செடியானது தன் வேர்களை அங்குமிங்கும் அனுப்பி, சாரத்தையும் உரத்தையும் உட்கொண்டு கொடிகளுக்கு அனுப்ப, அக்கொடிகள் தாங்கள் பெற்றுக்கொண்ட சாரத்தால் வளர்ந்து கனிகொடுக்கின்றன. நாம் கிறிஸ்துவால் பிழைப்பதும் கனி கொடுப்பதும் இதுபோலவே! தேவனுடைய சகல பரிபூரணமும் அவருக்குள் நிறைந்திருக்கிறதென்றும் ‘அவருக்குள்’ நீங்கள் பரிபூரணமுள்ளவர்களா யிருக்கிறீர்கள் என்றும் அப்போஸ்தலன் சொன்ன ஐக்கியத்தின் இரகசியம் இதுதான்!
- ரத்னம்