பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

03.02.2025

5. பிரான்ஸ் நாட்டு புனித அம்மையாரின் தாழ்மை ஜெபம்!

 “ஓ கர்த்தாவே, இத்தனை இழி பிறவியான என் மீது நீர் அருளிச் செய்த உமது அன்பும், பிரசன்னமும் மகா அதிசயமாய் நான் காண்கிறேன். என்னையும், என் வாழ்க்கையையும் கவனமாய் உற்று நோக்கும் யாராயிருந்தாலும், தேவரீருடைய பகுதியில் நன்மையையும், இரக்கத்தையும், அன்பையும் மாத்திரமே கண்டிருப்பார்கள்.... ஆனால் என்னுடைய பகுதியிலோ பெலஹீனமும், பாவமும், அவிசுவாசமும் மாத்திரமே கண்டிருப்பார்கள். ஓ தேவனே..... என் பெலஹீனத்தையும், என் தகுதியற்ற தன்மையுமே தவிர நான் மேன்மை பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை! என்னையும் உமது நித்திய மணவாளியின் ஐக்கியத்தில் சேர்த்துக் கொண்டீரே, உமக்கு நான் என்ன கொண்டு வந்தேன்? மணவாளியாகிய என்னிடம் இருந்ததெல்லாம் பெலஹீனமும், பாவமும், வேதனையும் மாத்திரமே! நான் என் செய்வேன்?..... என்னையே முற்றிலும் உமக்குத் தந்து விடுவது ஒன்றே என் பெருமகிழ்ச்சி! 

 என்னை நீர் நடத்தியவிதம் “ஒரு மகத்துவமுள்ள இராஜா ஓர் அடிமையின் அடிமைத்தனத்தை மறந்துவிட்டு, அந்த ஏழை அடிமையை திருமணம் செய்ய” நாடி வந்ததாகவே காண்கிறேன்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!