அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
வயதாகிப்போகும் ‘விருத்தாப்பியம்’ நமக்கு சஞ்சலம் இல்லை! ஏனெனில், இயேசுவை சொந்த இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்ட வாலிப காலம் தொடங்கி..... வயோதிப காலம் வரை நம்மை நடத்தி வந்து பழகிய இந்த தேவன் “நம் தேவன்” என்ற ஆசீர்வாதமான உறவுக்குள் கொண்டு வந்து விடுகிறார்! (சங்.48:14). அவர் ‘என்றென்றைக்கும்’ உள்ள நம் தேவன்! மரணபரியந்தமும் கூடவே நின்று நம்மை நடத்தி, அவரோடு ‘என்றென்றைக்கும்’ வாழும் பாக்கியத்தை தருகிறார்!! (சங்.48:14). ஆகவேதான், தேவனால் நடத்தப்படும் பாக்கியம் பெற்றவர்கள், தங்கள் விருத்தாப்பிய காலங்களில் இன்னமும் அதிக மகிழ்ச்சியே அடைவார்கள்! அல்லேலூயா.