அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
13.05.2024
20. ‘தெய்வ அன்பின்’ புனிதமே, நமக்கு வேண்டும்!
நாம் “ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்!” என்ற கட்டளை “தேவனை அறிந்தவர்களுக்குரிய” ராஜரீக கட்டளையாகும்! (1யோவான்4:7,யாக்2:8). ஆகிலும், ‘தேவனை அறியாத’ உலகத்துக் குரியவர்களும் ‘ஒருவரையொருவர் நேசத்தை’ பேசுகிறார்கள் என்றும் ..... உலகத்துக்குரிய மானிட அன்பிற்கே, இந்த உலகம் செவி கொடுக்கிறது! என 5-ம் வசனம் வேறு பிரித்து காண்பிக்கிறது. இரட்சிக்கப்பட்டு, சபையில் பல வருடங்களாகியும் “இயேசுவின் சீஷனாய் மாறாத” விசுவாசிகள், இந்த வேறுபாட்டை அறியாதபடியால், இந்த “உலக அன்பில்” சேதமடைகிறார்கள்!
‘அன்பு’ தேவனுக்குரியது! எனவும், தேவனால் பிறந்தவனுக்கே அது சொந்தம்! எனவும் 7-ம் வசனம் கூறுகிறது! அப்படியிருக்க, ‘மனுஷீக அன்போ’ சொந்தம் - பந்தம் தொடங்கி, உலகப்பொருளை சுற்றிச் சுற்றியே ‘அன்பு’ என கூறிக்கொள்ளும்! அதை இன்னமும் கொச்சைப்படுத்தி “LOVE = காதல்” எனவும் கூறிக்கொள்ளும்!
புனித வேதத்தில் ‘காதல்’ என்ற வார்த்தைக்கு இடமேயில்லை!
- ரத்னம்