அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
நீங்கள் தெய்வபயத்தோடு வாழ்கின்றவராய் இருந்தபோதும், உங்கள் முகபாவனைகளை நீங்களே காணாதவராய் இருக்க முடியும். அதைக் ‘கண்ணாடிபோல்’ உங்கள் பிள்ளைகள் பிரதிபலிப்பதைக் காணும் எந்த உத்தம கணவனும், மனைவியும் துரிதமாய் மனந்திரும்பி திவ்விய சுபாவத்தில் வளருவார்கள்!
“இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளி” என 2கொரிந்தியர் 4:8-ல் வாசிக்கிறோம். அதேபோல், ஸ்தேவானை ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக நிறுத்தி, அவன்மீது பொய் குற்றங்களை சுமத்தியபோது “அவன் முகம் தேவதூதன் முகம் போலிருக்கக்கண்டார்கள்” எனவும் அப்போஸ்தலர் 6:15-ல் வாசிக்கிறோம். ஆகவே நம் “முகபாவத்தில் திவ்விய சுபாவம்” அடைந்திட நாடுவதும் “பூரணத்தை நோக்கி” கடந்து செல்லும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமாகும்!
உங்கள் “கடுஞ்சொல்லைவிட” உங்கள் “முகச்சுளிப்பு” அல்லது உங்கள் “நெற்றியை சுருக்குதல்” அதிகக் கொடியதென்றே கூறலாம்!