அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
சீயோன் குமாரத்தி’ கர்த்தருக்கு உரியவள்! அவளோ, தாழ்மையும் சிறுமையுமானவள்! அவளுக்கு ஏற்படும் ‘கலக்கத்தை’ கர்த்தர் காண்பார்! உடனே அவளிடம் “இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்” என வருவார்! ஆகிலும் நமது ராஜா ‘கழுதையின் மேல்’ ஏறி வருவார். அதாவது, சீயோன் குமாரத்தியின் சிறுமையும், தாழ்ச்சியுமே, ராஜாவை அழைத்து வரச்செய்யும் ‘கழுதையாக’ குறிப்பிடப்பட்டிருக்கிறது! (சகரியா 9:9).
ஏனெனில், அடுத்த 10-ம் வசனத்தில், எதிராளியின் ‘குதிரைகளை’ அற்றுப்போகப்பண்ணுவேன்! என ஆண்டவர் கூறினார்! எதிர்கொண்டு வந்த அகந்தையான ‘குதிரைகளால்’ கலங்கிய சீயோன் குமாரத்தி ஆறுதல் அடைந்தாள்! ஆ, இந்த இரட்சிப்பு பாக்கியமானது! ‘கழுதை’ எதிர்கொண்டு ‘குதிரையை’ ஜெயித்திடும் பாக்கியம்! சீயோன் குமாரத்தி களிகூர்ந்து, கெம்பீரிப்பதற்கு இனி என்ன தடை? அல்லேலூயா.