அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
எந்த சூழ்நிலையிலும் “கர்த்தரை ராஜாவாக வீற்றிருக்கச் செய்து” பவனி செல்வது நமக்குரிய சிலாக்கியம்! அந்த பவனிக்கு ஆயத்தம் உண்டு! அந்த பவனியில் “ஓசன்னா” கீதம் முழங்க வேண்டும்! எப்படியெனில் பவனியில் ‘முன்நடப்போர்’ கர்த்தர் தங்கள் ‘கடந்த காலத்தில்’ நடப்பித்த அத்தனை செயல்களுக்கும் “அவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” என்றே ஆர்ப்பரித்திட வேண்டும்! (மாற்கு11:9,10). பின்பு, ராஜாவுக்கு ‘பின்நடப்போர்களாய்’ இப்போதும், இன்று சம்பவிக்கும் அனைத்து சூழ்நிலைக்கும் முன் செல்லும் “அவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” என்னும் ‘ஓசன்னா’ ஆர்ப்பரித்திட வேண்டும்! ஆ, இதுவே நாம் ஆயத்தம் செய்ய வேண்டிய “கர்த்தருடைய பவனி” (ஞசடிஉநளளiடிn டிக வாந டுடிசன). ஆசீர்வதிக்கப்பட்ட இந்த பவனியில் ‘ராஜாவாய்’ வரும் அவர், நம்மிடம் ‘பயப்படாதீர்கள்’ என்பார்! சகலமும் நன்மையாய் முடித்து தருவார்! ஆமென்.