அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
08.07.2024
28. ஒருவன் இரட்சிக்கப்பட ‘இரட்சகரை விசுவாசிக்க’ வேண்டும்!
இன்று, அனேக ஜனங்கள் “ஒருவன் எதை அறிந்து விசுவாசிக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. இந்த உலகத்தில் நீதி - நேர்மையாக வாழ்ந்தால் போதும்! எப்படியாகிலும், எந்த வழி சென்றாலும், முடிவில் தேவனிடத்தில் போய்விடலாம். தேவன் அன்புள்ளவராயிருந்தால், ஒருவன் இயேசு கிறிஸ்துவை விசுவாசித் தாலோ அல்லது அவரை விசுவாசிக்காமல் புறக்கணித்தாலோ, தேவன் அந்த நபரை அன்புடன் ஏற்றுக் கொள்வார்!” என்றெல்லாம் வாதம் செய்கிறார்கள். ஆகவேதான் சுமார் 2000 வருடங்களுக்குப் பிறகும், கிறிஸ்துவின் சுவிசேஷம், இந்த உலக ஜனத்தொகையில் 50% மக்களைக்கூட சென்றடையவில்லை!
ஆனால் பரிசுத்த வேதாகமமோ “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல், வேறொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை” (அப்போஸ்தலர் 4:12) என ஆணித்தரமாய் எடுத்துரைக்கிறது.
- ரத்னம்