அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
தாவீதுக்கு தேவன் அருளின ‘நிச்சயமான கிருபை’ (SURE GRACE) என்ற வாசகம் எத்தனை பரவசமானது! (அப்.13:34). தெய்வ கிருபையின் பொருள் ‘ஏற்ற சமயத்தில்’ உதவிடும் கர்த்தரின் கரம்! என்றே எபி.4:16 கூறுகிறது! ஆட்டிடையான தாவீது, சின்னப் பையனாயிருக்கும்போதே, தன் கர்த்தரின் உதவிக்கரத்தை ஒரு சிங்கத்தை எதிர்கொண்டபோது, அதைக் கொன்று கிருபையை அனுபவித்தான்! அதே சின்னப்பையன் தாவீது, கர்த்தரின் மந்தையான இஸ்ரவேலுக்கு நிகழ்ந்த சோகத்தில் ‘அரக்கன் கோலியாத்தை’ எதிர்கொண்டு, அவனைக் கொன்று கிருபையை அனுபவித்தான்! வாலிபனாகிய போது ‘சவுலின் கொலைவெறியை’ எதிர்கொண்டு, அதை ஜெயித்து கிருபையை அனுபவித்தான்! மா அரசனாய் இருந்தபோது, படையெடுத்துவந்த ‘எதிரி தேசங்களை’ வென்று கிருபையை அனுபவித்தான்! தாவீதின் சந்ததியில் வந்த ‘இயேசு’ மரணத்தையும் வென்று, தெய்வ கிருபைக்கு புகழ் சேர்த்தார்! அந்த ‘நிச்சயமான கிருபையை’ நமக்கும் தருவதாக கூறும் அப்.13:4 மாபெரும் நற்செய்தி அல்லவோ!