அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
19.08.2024
34. சுவிசேஷம் தந்த சுதந்திரம் வாழியவே!
ஆண்டவர் இயேசுவே, நீர் வழங்கும் சுதந்திரம் எமதாகட்டும்! பல்வேறு சோகத்தால் ‘உடைந்துபோன இருதயங்கள்’ குணமடையட்டும்! பாவத்தால் அடிமையான உமது மக்களின் ‘அடிமை விலங்கு’ முறிந்து வீழட்டும்! எம் இரட்சகரை கண்கள் காணட்டும்! சிறைவாசம் நீங்கி,
விடுதலை! விடுதலை! என,
130-கோடி உமது இந்திய மக்கள் சுவிசேஷத்தால் சுபிட்சம் பெறட்டும்! (லூக்கா 4:18ab).
விண்ணரசே வருக! பாரத தேசத்தை ஆளுக!
- ரத்னம்