அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
13.01.2025
2. கர்த்தர் வருவார், எனக்காக யாவும் செய்து முடிப்பார்!
அன்று, பூரண அர்ப்பணத்தோடு, தகப்பன் வீட்டை விட்டு, அழைத்தவரை 1981-ம் ஆண்டு மார்ச் மாதம் பின்தொடர்ந்து வந்த நான்! ஊழியத்தின் முதல் மாதத்தில் எனது பிறந்த நாளுக்கென்று, சொற்ப நூறு ரூபாய் கொண்டு ஷர்ட் வாங்க முயற்சித்து, தடங்கல் ஏற்பட்டு, பிறந்தநாளை கடந்து செல்ல வேண்டிய சில மணிநேரங்கள் முன்பாக “புதிய சிறப்பான ஷர்ட்” கொண்டு வந்து தந்தார் ஆண்டவர்! இந்த ஆரம்ப ஊழிய காலத்திலிருந்து நான் கற்ற மிகப்பெரிய பாடம் “மன விருப்பம் அறியும் கர்த்தர், வருவார்! சிறப்பானதைச் செய்வார்!” என காத்திருக்க கற்றுக்கொண்டேன்!
நானாக யாதொன்றும் செய்யாமல், எனக்காக யாவும் செய்து முடிக்கும் கர்த்தரை 43- ஆண்டுகளாய் ஜீவியத்திலும், ஊழியத்திலும் அனுபவித்து வாழ்கிறேன்! (சங்.138:8). இந்த புதிய ஆண்டு முழுவதும், உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் சபைக்கும், அப்படியே செய்வாராக! அவர் நிச்சயமாய் செய்வார்! ஆமென்.
- ரத்னம்