அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
“ஐசுவரியவான் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது அரிது” (மத்.19:23) என இயேசு கூறியதை “பணக்காரன் பரலோக இராஜ்ஜியம் வர முடியாது!” என அவர்களை தீழ்ப்பாய் பார்ப்பது கொடிய துயரம்! ஏன் தெரியுமா? சைக்கிள் வைத்திருப்பவன் ‘பைக்’ வைத்திருப்பவனை பணக்காரன் என எண்ணுகிறான், ‘பைக்’ வைத்திருப்பவன் ‘கார்’ வைத்திருப்பவனை பணக்காரன் என எண்ணுகிறான், ஒரு கார் வைத்திருப்பவன் இரண்டு கார் வைத்திருப்பவனை பணக்காரன் என எண்ணுகிறான்.... இவ்வித தொடரும் ‘கானல் நீர்’ ஓட்டத்தில், இவ்வுலகில் ‘உண்மையான’ பணக்காரன் ஒருவருமே இல்லை! தேவ பக்தியில் வாழ்ந்து “போதும்” என திருப்தி கொண்டு வாழ்பவனே “மிகுந்த ஆதாயம்” பெற்ற ‘உண்மை’ பணக்காரன்! (1தீமோ.6:6) என வேதம் அரிதியிட்டு அன்றும் இன்றும் கெம்பீரிப்பதைப் பாருங்கள்!! ஆனால், நீங்கள் கூலி வேலைபார்த்து, சைக்கிளில் செல்பவராய் இருந்தாலும் அல்லது ‘லேட்டஸ்ட்’ காரில் செல்லும் ‘மேனேஜராய்’ இருந்தாலும்...... ஆகிய இருவரிடத்திலும் “தேவ பக்தி” என்ற ஐஸ்வரியம் எந்த வித்தியாசமும் இல்லாமல், செழித்துப் பொங்கி வழிவது ஒன்றே உண்மை!