அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

27.10.2025
43. ‘பெற்ற சுவிசேஷம்’ பிறருக்கு அறிவிப்பதே, நிலைத்திருக்கும் ரகசியம்!
கிறிஸ்தவ ஜீவியத்தில், இன்று மங்கி வரும் முக்கியபகுதி என்னவென்றால் “முடிவுவரை நிலைத்திருப்பதுதான்!” ஆகவே, தாங்கள் பல வருடங்களாய் கான்பரன்ஸ் கூட்டங்கள்..... புத்தகங்கள், கேஸட்டுகள் என கேட்டு, கேட்டு சத்தியம் பெற்றதாக கூறும் அனேகர், தாங்கள் அதை ‘பிறருக்கு மனப்பூர்வமாய், வாரிக் கொடுக்காதபடியால்’ அவர்கள் பெற்ற சம்பூர்ண சுவிசேஷத்தின் நீதி, நிலை நிற்கவில்லை!
அன்று அவர்கள் பெற்ற ‘பாவத்தின்மீது வெற்றி’ ‘தாழ்மை’ ‘பரிசுத்தம்’ ‘அன்பு, ஐக்கியம்’ போன்ற எண்ணற்ற நற்குணங்களில் ‘பூச்சி அரித்து விட்டது!’ அது நிலைநிற்கவில்லை என்ற பரிதாபத்தை காண்கின்ற நாம், எச்சரிப்படையக்கடவோம்! பிறருக்கு, தாங்கள் பெற்ற சுவிசேஷத்தை அறிவிப்பதை கடமையாக மாத்திர மல்லாமல் “மகிழ்வுடன், உற்சாகத்தோடு கொடுத்திட” நாம் எல்லோரும் தீவிரம் கொள்ளக்கடவோம்!
- ரத்னம்
