அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
தன் ஒரே குமாரத்தியின் சுகத்திற்காக யவீரு என்ற ஜெப ஆலயத்தலைவன் இயேசுவிடம் ஜெபித்து, அவரை அழைத்து வந்தபோது ஏற்பட்ட விசுவாச சோதனையே “உன் குமாரத்தி மரித்துவிட்டாள்” என்ற சேதி! அப்போது இயேசு யவீருவிடம் கேட்டதெல்லாம், உன் மகள் மரித்தாலும் “நீ அவிசுவாசமாகிய பயத்திற்கு இடம் தராதே! ONLY BELIEVE..... அதாவது, விசுவாசத்தை உடையவனாய் மாத்திரம் இரு” என்றார். இப்படி விசுவாசித்து வாழ்வது, சூழ்நிலையைக் கண்டு அழும் மக்களுக்கு, நகைப்பாகவே இருக்கும்! அப்படித்தான் அங்குள்ளவர்கள் நகைத்தார்கள்! இயேசுவோ, விசுவாசத்தை பரிகசித்து நகைத்த அவிசுவாசிகளைத் தன் பார்வையை விட்டு அகற்றிவிட்டு, விசுவாசித்த யவீரைக் கொண்டு, மரித்துப்போன மகளை உயிர் பெறச் செய்தார்!! (லூக்கா.8:41,50,54).
“மரித்தாலென்ன? மரியாமலிருந்தாலென்ன? துயரமான சூழ்நிலைக்காக அழும் மார்த்தாளே, நீ விசுவாசிக்கிறாயா?” என்றே அவளை விசாரித்தார்! “ஆம், ஆண்டவரே” எனக் கூறிய மார்த்தாளைப் போலவே, நாமும் எந்நிலையிலும் அந்த விலையேறப் பெற்ற ‘விசுவாசத்தை’ இழக்காதிருக்க கவனம் கொண்டிருக்கக் கடவோம் (யோவான்.11:26,27), ஆமென்.