அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
கொல்கொதா சிலுவை சமீபித்த சமயம், இயேசு புறப்பட்டு ஒலிவமலையிலுள்ள கெத்செமனே தோட்டத்திற்கு “வழக்கத்தின்படியே” ஜெபிக்கச் சென்றார் என லூக்கா 22:39,40 வசனங்களில் வாசிக்கிறோம். இன்று அநேக கிறிஸ்தவர்கள் எண்ணுவதுபோல், இயேசுவின் கெத்செமனே ஜெபம், அவருடைய ஜீவியத்தின் கடைசி அனுபவம் இல்லை என்பதையே இந்த வசனம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. ஆம், அவர் கெத்செமனேக்கு அடிக்கடி சென்று ஜெபித்தார் என்பதையே “வழக்கத்தின்படி” அங்கு சென்றார் என இவ்வசனம் நமக்கு விளக்கிக்கூறுகிறது.
அவருடைய ‘வழக்கமான’ கெத்செமனே அனுபவத்தை, இந்த கடைசி நிகழ்ச்சி மூலம் தேவன் நமக்கு சற்றே திரை விலக்கி காண்பித்திருக்கிறார்! இயேசு, தான் மாத்திரம் ஜெபிக்க சென்றுவிடாமல், தன் சீஷர்களையும் ஜெபிக்கும்படி கூறிய அழைப்பு....
அவர் சென்ற “வழக்கமான” கெத்செமனே ஜெப அனுபவத்திற்குள் அவருடைய சீஷர்களாய் இருக்கும் நாம் யாவருமே பிரவேசித்திட கொடுத்த அழைப்பேயாகும்!