அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
சுய கௌரவம், சுய பட்சாதாபம், கொதிக்கும் கோபம், தகித்திடச் செய்யும் பாலிய இச்சைகள்.... ஆகிய யாதொன்றிற்கும் இரக்கம் செய்யாமல், “இத்தனை காலம் உனக்கு இன்பம் தந்தோமல்லவோ” போன்ற மாம்சத்தின் கெஞ்சுதலுக்கு பலியாகாமல், அவைகளை “சிலுவையில் அறைந்து, இரத்தம் சிந்தி, மரித்து “ஜீவனுக்குள் பிரவேசித்திடவேண்டும்! இவ்வாறு “என் சிலுவையை” இயேசுவைப் போல் மரணபரியந்தம் கீழ்ப்படிந்து, நம் குருவைப் பின்பற்றி நடந்திட நம் யாவருக்கும் தேவன் கிருபை செய்வாராக! (பிலி.2:8). இந்த சிலுவை வழியில் அனுதினமும் இயேசுவைப் பின்பற்றினால் மாத்திரமே, அவரைப்போல் ‘மகிமையில்’ முடிசூட்டப்படுவோம்! (எபி.2:9). வெளியில் “முரண்பாடு” கொண்டு, அதை சிலுவை என்று எண்ணியவர்கள், தங்கள் சூழ்நிலைகளில் ‘ஒடுங்கிப் போவார்கள்!’ புறக்கணிக்கப்படும் வேளையில் ‘மனமுறிவு அடைவார்கள்!’ (2கொரி.4:8,9). இதுவல்ல, “என் சிலுவை!”
என் சிலுவையோ, அடுத்த வசனங்களில் குறிப்பிடப்பட்ட என்னை “இயேசுவின் மரணத்திற்குள்” நடத்தி “இயேசுவின் ஜீவனை” எனக்குள் மலரச் செய்துவிடும்! ஆமென்.