அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
‘சிறுமைப்படுகிறவர்கள்’ தாங்கள் சிறுமைப்படுவதை ஏற்றுக் கொள்வதே தாழ்மை! (சங்கீதம்.10:17). இவ்வித தாழ்மைக்கே தேவன் தமது கிருபையை ‘அதிகமாய்’ பொழிந்து முடிசூட்டுகிறார்!
ஆகவே, உங்களுக்கு ‘சிறுமையை’ கொண்டு வந்த நபர் (அவருக்கே தெரியாமல்) தன்னோடு ‘கிருபை’ என்னும் பரிசுப் பெட்டியை கொண்டு வருகிறார்! மனப்பூர்வமாய் சிறுமையை ஏற்றுக்கொண்ட நீங்கள், அவரிடமிருந்து பரிசை அல்லது ‘அவர் மூலமாய்’ தேவன் அனுப்பிய ‘கிருபையைப்’ பெற்றுவிட்டீர்கள்! ஆகவே, அவருக்கு உள்ளத்தில் நன்றி கூறுங்கள்! இவர்களுக்கே, தன் கிருபையின் பரிபூரணத்திலிருந்து “கிருபையின் மேல் கிருபை” பெற்றிட தேவன் வழி செய்கிறார்! (யோவான்1:16). சகலத்திற்கும் போதுமான கிருபைக்குள் நடத்தும், ஆ... இந்த சிறுமையே நமது பாக்கியம்!!