அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

04.08.2025
31. இருதய ஆயத்தம் ஒன்றே நமது தேவை, ஜெயம் அவர் தருவார்!
இவ்வுலகில் நமக்கு உபத்திரவங்கள் உண்டு, என்றே முன்மொழிந்தார் இயேசு! வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள், உத்தம சீஷர்களுக்கு ஓர் யுத்தம் போன்றதே! ஆகிலும், ‘ஒரு ராஜா’ யுத்தத்திற்கு குதிரையை ஆயத்தம் செய்வது போல, அவரது சீஷர்களோ தங்கள் இருதயத்தை ஆயத்தம் செய்வர்! சூழ்நிலையின் போராட்டம் எத்தனை அதிகமாயிருந்தாலும் உத்தம சீஷன் ஆர்தெழுவான்.... யுத்தம் செய்ய அல்ல, தன் குதிரையை ஆயத்தம் செய்திட! தன் இருதயத்தை ‘நிறுத்துப் பார்க்கும்’ கர்த்தருக்கு முன் வைத்து அதில் தோன்றிய பாவங்களைக் களைந்து ‘பதட்டம், கவலை அகற்றி’ பரிசுத்தத்திலும், விசுவாசத்திலும் தன் இருதயத்தை நிலை நிறுத்தும் இருதய ஆயத்தம்! இனி அவன் என்ன செய்வான்? அவ்வளவுதான், ஒன்றும் செய்யான்! இளைப்பாறுதலோடு சும்மா இருப்பான்.... ஜெயமோ கர்த்தரால் வரும்! நிச்சயம் வரும்! (நீதி.21:1,31).
- ரத்னம்
