அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

23.11.2026 துளிகள் - 47
‘கீழ் ஜாதி’ துவேஷம் இல்லாத இயேசுவின் அன்பு!
இமாச்சல் பிரதேசத்தில் ‘தீண்டாமை’ தலை விரித்து ஆடிய கொடிய காலம்! ஒரு உயர்நிலை பள்ளியில் தீண்டத்தகாத, துப்புரவு பணியாற்றிய ஒரு தோட்டி, கொடிய விஷக் காய்ச்சலால் தன் சேரியில் மரண தருவாயில் அவஸ்தைப்பட்டார். சாது சுந்தர்சிங்கை தன் குருவாய் கண்டு அவரின் அன்பின் சீஷனாய் விளங்கிய ஒரு மாணவ இளைஞன், உயர் வகுப்பை சேர்ந்தவன்! அவன், தீண்டத்தகாத தோட்டியின் குடியிருப்புக்குச் சென்று, சுகவீனமாய் கிடந்த பள்ளியின் தோட்டிக்கு அனைத்து உதவிகளையும் செய்து, அந்த சேரியிலேயே தங்கி, நல்ல சுகத்துடன் அந்த தோட்டி பள்ளிக்கு திரும்பி வரச் செய்தான்! இதுபோன்ற செயல், இமாச்சல உயர்குல மக்களிடையில் அந்நாட்களில் சம்பவித்தது, ஒரு மாபெரும் அற்புதம் என்றே சொல்ல வேண்டும்! கிறிஸ்துவின் தியாக அன்பை அந்த பிற்படுத்தப்பட்ட ஊர் ஜனங்கள் கண்டு, ருசித்தார்கள்!
- ரத்னம்
