அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

16.11.2026 துளிகள் - 46
சபைகள் வெகுகாலமாக, தன்னலமற்ற மிஷனெரிமார் பார்வையிலிருந்தன! சபைகள் சுய ஆதரவும், சுய ஆளுகையுமுள்ளதாக இருக்க வேண்டுமென்று அவர்கள் முயற்சி எடுத்ததின்பேரில், பல சபைகள் சுயாதீனம் பெற்று கிறிஸ்துவுக்குள் ஓங்கி வளர்ந்தன! சில காலங்களுக்குப் பிறகு, போதகர்களோடு சேர்ந்து சபையின் காரியங்களைக் கவனித்து நடத்த “சபை கமிட்டிகள்” ஏற்படுத்தப்பட்டன. கமிட்டி அங்கத்தினர்கள் தேவ பக்தியுள்ளவர்களாயிருந்தால், சபைக்கு எவ்வளவோ ஆசீர்வாதமாயிருந் திருப்பார்கள். பொதுவாய் அப்படி வாய்க்கிறதில்லை! கமிட்டி அங்கத்தினர் களாய் தாங்கள் தெரிந்து கொள்ளப்படுவதற்கு, சட்ட சபையிலும், நகர சபையிலும் தேர்தல் நடக்கும் காலத்தில், பணங்களைச் செலவுசெய்து ஓட்டர்களைச் சம்பாதிப்பது போலவே, கிறிஸ்தவ சபைகளிலும் நடைபெற துவங்கியது, மாபெரும் வீழ்ச்சியாய் மாறியது!
ஆகவேதான், வேதம் கூறுகிறபடி சாட்சி நிறைந்த தேவ பக்தியுள்ள வர்களை மாத்திரமே, தேவ ஊழியர்களாய் தெரிந்தெடுப்பது நல்லது (1தீமோத்தேயு.3:8-10). இவர்களே, தேவன் மீது தங்கள் முழு நம்பிக்கை யையும் வைத்து, தங்களிடம் ஒப்புவித்த மந்தைக்கு நல்ல மாதிரிகளாய் திகழ்ந்து, தங்கள் சபை மக்களை ஆவிக்குரியவர்களாய் கெம்பீரமாய் நடத்திட முடியும்!!
- ரத்னம்
