பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

ஜெயித்து வாழ்ந்திட வாலிபர் செய்திகள்

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!


ஜீவிய வெறுமையை தேடாமல், கர்த்தரை தேடுவதே பாக்கியம்!

 ஒரு பையன், ஒரு வெங்காயத்தை எடுத்து உரித்துக்கொண்டே இருந்தான். அதனுள் என்னதான் இருக்கிறதென்று தோண்டிப் பார்க்கும் உலக மாந்தர்களின் மோகமும் இதுபோலவே இருக்கிறது!

 ‘தம்பி! அதனுள் ஒன்றுமில்லை வெறும் தோல்தான்’ ஏன் வீணாக முயற்சி செய்கிறாய்? என்று முதிர்ச்சி பெற்ற ஒரு அண்ணன் கூறினார்.

 அந்தப் பையனோ, அந்த அண்ணாவின் வார்த்தையை நம்பவில்லை! அவரது புத்திமதியை புறக்கணித்துவிட்டு, இன்னும் அதிக ஆர்வமான வெறித்தனத்துடன் வெங்காயத்தை உரித்துக்கொண்டே இருந்தான்! கடைசியாக அதனுள் ஒன்றுமில்லாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தான்! இதுவரை வெங்காயத்திற்குள் என்ன இருக்கிறதென்று அறிந்திட விரும்பிய மனஆர்வம் (Curiosity)  கொடுத்த விளைவு ‘நேரத்தை வீணாக்கியது’ ஒன்றே என்பதை அவன் கண்டு வருந்தினான்! 

 மாயமான இந்த உலகிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கிறவர்கள், எளியோர் முதல் வலியோர் வரை, கடைசியில் கண்டு கொள்வது ஒன்றுமில்லை! அவர்களின் பையன் காலம் தொடங்கி, வாலிபம் தொடர்ந்து, குடும்பமாகி, ஆஸ்திகள் சேர்த்து, இவ்வாறு “பெற்றுக்கொள்ள” நாடும் ஜீவியம் முழுவதும் “ஒன்றுமில்லை” என்றே முடிவடைந்துவிடுகிறது! 

 ஓ, வாலிபனே ‘இந்த காலத்தில்’ உன்னைத் தூண்டும் பேரார்வங்கள், வெறுமையாய் போகும்  மாயை என்பதை அறிவாயாக. இவ்வுலகில் ஒருவன் நாட வேண்டிய மெய்யான தேடுதல் “நீ இயேசுவை நாடு!” என்பதுதான்! உயிர்த்தெழுந்து, இன்றும் ஜீவிக்கின்ற ஆண்டவர் இயேசு மாத்திரமே, நிச்சயமாய் உன் வாழ்வை மாற்றி, “அழியாத நித்திய ஜீவன்” தந்து உன்னை ஆசீர்வதிப்பார்!  

- வாலிபம் இயேசுவுக்கே


'ஜெயித்து வாழ்ந்திட' வாலிபர் செய்திகள்!

கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

அக்டோபர்

  • தெய்வ ஞானத்தின் அதிசயம் கண்டு, சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்!