பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

12.01.2026

02. ‘சிலுவை வழியே’ ஒரு கிறிஸ்தவனின் வழி!

 கிறிஸ்து நமக்காக சிலுவையிலறையப்பட்டாரே’ அதுவா இன்றைய கிறிஸ்தவ மார்க்கத்தாருக்கு இடறல்? இல்லை! “நாம் சிலுவையிலறையப்படுகிறோமே” அதுதான் இவர்களுக்கு இடறல்! ஏனென்றால், இங்குதான் நம் எல்லா சுயமும், அது எவ்வளவு அருமையாயிருந்தாலும் அல்லது எவ்வளவு லாபமாயிருந்தாலும், அவைகள் யாவும் கொஞ்சமும் இரக்கமில்லாமல் புறக்கணித்துத் தள்ளப்படுகிறது! அதன் சுயமரியாதைக்கோ அல்லது சுய-கௌரவத்திற்கோ கிஞ்சித்தும் இடமே இல்லை!! 

 ஆ, இங்குதான் இவர்கள் கோபம் கொள்ளுகிறார்கள். தங்கள் பார்வையில் இவர்கள் எவ்வளவு சுய-கௌரவ மதிப்பில் மிதந்து மகிழ்கிறார்களோ அவ்வளவு அதிகம் கோபக்கனலாகிறார்கள்! ஆனால் உண்மை என்ன தெரியுமா? ‘நமக்கு அருமையான’ இந்த எல்லா சுயமும் மரணத்திற்கே உரியது! அது கிறிஸ்து இயேசுவின் மூலமாய் சிலுவையில் அறையப்பட்டு விட்டது! இனி, ‘சிலுவை எடுத்து’ கிறிஸ்தவனாய் வாழ வேண்டிய பொறுப்பு நம்மையே சார்ந்ததாகும்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!