அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

05.01.2026
01. நீங்கள் பரிசுத்தாவி அபிஷேகம் பெற்றது உண்மைதானா?
ஒருவன் பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெற்ற பின்பு, இயேசுவைப் போலவே வாழவேண்டும் என்ற பேரார்வம் அவனுக்கு இல்லையென்றால் அவன் ஒரு கிறிஸ்தவன் அல்ல! என்ற உண்மையை ஆணித்தரமாய் பவுல் எடுத்துரைத்தார் (ரோமர் 8:9).
எனவே ‘நான் பரிசுத்தாவி பெற்றுவிட்டேன்’ என நீங்கள் மார்தட்டி கொள்வதில் பிரயோஜனம் இல்லை! நீங்கள் பெற்ற பரிசுத்தாவியின் அபிஷேகம் உங்களை வேறு பிரித்து காட்டும் அபிஷேகமாயிருக்கிறதா? என்பதே உண்மையான விடை!
பரிசுத்தாவியினால் நடத்தப்பட்டு ஒரு கிறிஸ்தவனாய்! தேவ குமாரனாய்! ஒளி வீசுவீர்களா? அல்லது, பரிசுத்தாவியானவர் உங்களைப் பார்த்து “நீ கிறிஸ்தவனல்ல” என கூறுவாரா? என்பதை தீர்க்கமான விடையாய் பரிசுத்தாவியானவர், ஒவ்வொரு கிறிஸ்தவனுக்குள்ளும் கொண்டு வர விரும்புகிறார்! அப்படி இல்லையென்றால், எல்லோரையும் போல் அபிஷேகம் பெற்றுக் கொண்டோம் என, போலி திருப்தி கொண்டவர்கள் யாவரும், ஒருநாளில் நிச்சயமாய் வேதனையடைவார்கள் என்பதை அறிவோமாக!
- ரத்னம்
