அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

26.01.2026
‘பகை அகற்றிய’ அன்பே, உண்மை சீஷத்துவம்
பிறரால் ஏற்படும் பகை, விரோதம், நிந்தை, அவமானங்களே.... தெய்வ அன்பை நாம் அதிக அதிகமாய் பெற்றிடும் நேரம்! நோயிருக்கும் இடத்தில்தானே, மருந்துக்கும் வேலை உண்டு! சத்துரு ஒருவன் இருந்தால்தானே, நேசத்திற்கு பணி உண்டு!
‘பகை’ தோன்றியவுடனே, தனக்கு எதிரிடையான பகையை இயேசு சிலுவையிலே அறைந்தார்! (கொலோ.2:14,15). இவ்வாறு ‘சிலுவை’ நம் வாழ்வில் கிரியை செய்யும்போதுதான் “பரிசுத்தாவியானவர் தெய்வ அன்பை” நம் இருதயத்தில் ஊற்றுகிறார்! (ரோமர்.5:5). இந்த அன்பின் சுவிசேஷத்தை திரளான கிறிஸ்தவர்கள் அனுபவமாய் வாழாதது துயரமே!
அப்படி வாழ்ந்திருந்தால், ஒருவரையொருவர் அன்புகூரும் கிறிஸ்தவர்களை “இவர்களே இயேசுவின் சீஷர்கள்” என எல்லோரும் அறிந்திருப்பார்கள்! (யோவான் 3:35).
- ரத்னம்
