பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

பனித்துளி செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

05.10.2026                                               துளிகள் - 40

‘மார்க்கத்தை’ அல்ல, தன்னையே மார்க்கமாய் அளித்த கிறிஸ்து!

 மார்க்கங்கள் பல உண்டு. மார்க்கங்களை உண்டு பண்ணின வர்களும், அம்மார்க்கங்களும் ஒன்றல்ல! உண்டு பண்ணினவர்கள் இல்லாமலேகூட, அம்மார்க்கங்களை மனுஷர்கள் அனுசரித்து வருகிறார்கள். “என்னை நம்புங்கள் நான் உங்களுக்கு உதவிசெய்வேன்” என்று புத்தன் சொல்லவில்லை. ஆகிலும், புத்தமார்க்கம் இருக்கிறது! அதுபோலவே, முகமது மார்க்கமும் மற்ற மார்க்கங்களும் இருக்கின்றன. கிறிஸ்து மார்க்கமோ அப்படிப்பட்டதல்ல! கிறிஸ்து இல்லாமல் கிறிஸ்து மார்க்கம் இல்லை. அவரே அதற்கு ஜீவனாயிருக்கிறார். கிறிஸ்துவே கிறிஸ்து மார்க்கம். தம்மை இன்னாரென்று வெளிப்படுத்தவே அவர் உலகில் வந்தார்!

 திரளான ஜனங்கள் அவரை இடைவிடாமல் பின்பற்றின போதிலும் அவரை ‘இன்னாரென்று’ அறிந்து கொள்ளவில்லை!

 ஜனங்கள் தம்மை அறிந்து கொள்ளாமற்போனாலும், தாம் தெரிந்து கொண்ட சீஷர்கள் தம்மை அறிந்துகொண்டால் போதும் என்றே நிறைவான பிதாவின் ஊழியத்தை செய்து முடித்தார்!

- ரத்னம்

'பனித்துளி' செய்திகள்

அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

டிசம்பர்

  • 12. ‘நம்மைத் தனியே விட்டுவிடாத’ தேவனுக்கு ஸ்தோத்திரம்!