பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

24.09.2026                                                                  39வது வாரம்

‘பெரிய அல்லது சிறிய சபை’ பாகுபாடு இயேசுவிடம் இல்லை!

 விசுவாசிகளின் ஐக்கியம் சிறியதோ அல்லது பெரியதோ, அவர்கள் இயேசுவின் பிரசன்னத்தில் கூடி வந்து ஆராதித்தால், அந்த கூடுகை சிறிய சபையா? அல்லது பெரிய சபையா? என தேவன் வேறுபாடு பார்ப்பதில்லை! ஆனால், இன்றைய ஜனங்களோ சபையிலுள்ள மக்களின் எண்ணிக்கையை தொகையிட்டு பார்க்கிறார்கள். இதுபோன்ற ஜனங்கள், முற்றிலும் மாம்ஷீக சிந்தை கொண்டவர்கள், ஆவிக்குரியவர்கள் அல்ல! இயேசுவின் நாமத்தில், அவரது பிரசன்னத்தில் கூடி வரும் எந்த சபையையும் தேவன் கண்டு “எல்லா சபைகளும், என்னுடையவைகள்! நான் வழங்கும் அனைத்து ஈவுகளையும் இந்த ஒவ்வொரு சபையும் பெற்றுக் கொள்ளும் உரிமை இருக்கிறது!” என்றே கூறுவார்.

 இவ்வாறு நாம் குறிப்பிடும் உரிமை, விசுவாசத்தை இழந்த, ஜீவனற்ற சபைகளுக்கு அல்லவே அல்ல!! தெய்வ பயமும், உண்மையும் கொண்ட விசுவாசிகளின் சபைகளுக்கே இந்த பாக்கியமான உரிமை உண்டு! சபை சரித்திரத்தில் தொன்று தொட்டு வரும், தெய்வ பக்தி நிறைந்த ஆவிக்குரிய எல்லா தலைவர்களிடத்திலும் தேவன் மதிப்பு வைத்திருக்கிறார். அவர்களை தேவன் மதித்து வைத்திருந்தாலும், “தலைவர்களாய் இருக்கும்” அவர்களோ, ‘சாதாரண வேலைக்காரர்களாய்’  கர்த்தருக்கு ஊழியம் செய்வார்கள்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!