பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


01.10.2026                                                                            40வது வாரம்

திருடன் தண்டிக்கப்படுவதைவிட, மனம் மாறுவதே பாக்கியமானது!


 சாது சுந்தர்சிங், தொடர்ந்து ஜெபிக்கச் செல்லும் ‘ஒரு குகையைப் பற்றி’ அவரிடம் சிலர் “ஐயா, இந்த குகை திருடர்களின் குகை என்று உங்களுக்குத் தெரியாதா?” என கேட்டார்கள். அதற்கு அந்த பரிசுத்தவான், “கீழே நான் வாழும் பட்டணத்தின் ஏராளமான சத்தங்களிலிருந்து, நான் மீண்டு, இங்கு ஆண்டவரை தியானிக்க  வருவதே எனக்கு ஓர் அலாதி இன்பம்!”. 

 நான் இங்கே அமர்ந்து தேவனை தரிசித்து செய்திடும் தியானத்தில், பரிசுத்தத்தின் அழகையும், தேவனின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெறுகிறேன்! நான் பெற்ற ஆசீர்வாதங்களால், மற்றவர்களுக்கும் ஊழியம் செய்கிறேன்! 

 அவ்வப்போது இங்கு கூடிவரும் திருடர்கள், யாதொரு தீங்கும் எனக்குச் செய்வதில்லை. அவர்கள் என்னிடம் “நாங்கள் திருடர்களாயிருந்தாலும், நல்லவர்கள் யாரென்று அறிந்திருக்கிறோம்..... ஆகவே நாங்கள் உங்களுக்கு ஒருபோதும் தீங்கு செய்யமாட்டோம்” என கூறுவார்கள். நான் இவர்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுக்க விரும்பவில்லை. ஏனெனில் இந்த உலக அரசின் நியாய தண்டனை ஒருவனை மாற்ற முடிவதில்லை.... அவனை தண்டிக்க மாத்திரமே முடியும்! அந்த தண்டனையில் அவன் இருதயம் இன்னும் அதிகமாய் கடினப் படுவதற்கே வாய்ப்புண்டு! நான் இங்கு தியானிக்கும்போது, இந்த திருடர்களுக்காவும் ஜெபிப்பதுண்டு. ‘இவர்களில் ஒருசிலர்’ தேவனுடைய கிருபையால் மனமாற்றம் அடைந்து, நல்ல பண்புள்ள குடிமக்களாய் மாறியிருக்கிறார்கள்” என கூறினார்!

- ரத்னம் (நன்றி: பரலோக பொக்கிஷங்கள் மாதாந்திர பத்திரிக்கை)

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!