நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

16.07.2026 29வது வாரம்
நீங்களும் சுகம் பெற்று, பிறரையும் சுகப்படுத்துங்கள்!

உங்களுக்கும், உங்களைச் சார்ந்த மற்றவர்களுக்கும் ஆவிக்குரிய சுகம் கொண்டுவர, ஒரே ஒரு வழிதான் உண்டு: நீங்களாக உள்ளத்தில் வைத்து கொண்ட, ‘பிறரைக் குறித்த’ அபிப்பிராயங்களையும், எண்ணங்களையும் தூர எறிந்துவிட்டு, உங்களை மாத்திரமே நிதானித்து வாழ்வது தவிர வேறு வழியில்லை.....! இப்பொழுது நீங்கள் உணர்ந்து அறிக்கை செய்வதெல்லாம்: 1) தேவன் எனக்கு ஒன்றையும் பிறரைக் குறித்த தீமை வெளிப்படுத்த வில்லை! 2)நான் ‘நினைத்ததற்கு’ முற்றிலும் மாறாக அந்த சகோதரன் இருக்கிறார்! 3)இதுவரை நானாக சிந்தித்துக் கொண்டதற்கு நேர்மாறாக நான் சிந்திக்கத் துவங்குவேன்! 4)இனியும், அவரைக் குறித்து யாதொரு அபிப்பிராயங்களையும் என் மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன்! 5)எதுவுமே வெளியரங்கமாய் தெரிந்து கொள்ளாத நான்..... அந்த சகோதரனை குறித்து நான் ஒன்றுமே அறியவில்லை என்பதை இப்போது ஒத்துக்கொள்கிறேன்! காரியத்தின் கடைத்தொகையாய்..... மேற்கூறப் பட்டவைகளின் அடிப்படையில், “ஒருவரைக்குறித்து ஒன்றுமே அறியாத எனக்கு.... இனி அவரை நான் நியாயந்தீர்ப்பதற்கும் எனக்கு ஒன்றுமில்லை!!” என்ற நேர்மையான அறிக்கையே உங்களை பூரண சுகப்படுத்த முடியும்! அந்த ‘பிறரையும்’ சுகப்படுத்தும்!
- ரத்னம்
