அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

13.07.2026 துளிகள் - 28
பாவம் ‘கருவில் அழிக்கப்பட’ வேண்டும்!
சிறிய பாவங்களானாலும், அது வெறுத்து தள்ளப்பட்டு அழிக்கப்பட வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கின்றார் என்பதை ஒரு மெய்யான பரிசுத்த ஜீவிதன் மனதார உணர்ந்திருப்பான். நச்சுக்கண் பாம்பு, அது தனது முட்டைக்குள் சின்னஞ்சிறு புழு போன்ற குஞ்சாக இருக்கும்போதே, நசுக்கி கொல்லப்பட வேண்டும் என்பதை அவன் அறிந்திருக்கின்றான். பாபிலோனின் சிசுக்கள் (சிறு பாவங்கள்) கல்லின்மேல் மோதி அடிக்கப்படுகின்றார்களா? என்பதை தேவனும் நம்மை கவனித்து பார்த்துக் கொண்டே இருக்கின்றார்! (சங்.134:8,9). ஆகவே, பெரிய பாவங்கள் மாத்திரமல்ல, சின்னஞ்சிறு பாவங்களும் கொல்லப்பட வேண்டும்! இல்லாவிட்டால், அவை நம் ஆத்துமாவைக் கொன்று போடும். தான் பெற்ற குஞ்சுகளே, தன் தாய் விரியன் பாம்பை கொன்று விடும் என்பார்கள்! தங்கள் மடியிலே வைத்து வளர்த்த சிறிய பாவங்களே, திரளான ஆத்துமாக்களை நித்தியமாக கொலை செய்திருக்கின்றன!
மனிதனின் இருதயத்தில் பட்ட ஒரு சிறிய கத்திக் குத்து காயம், அவன் உயிரை பறித்து விடுவதைப் போன்று, ஒரு சிறிய பாவமும் ஒரு மனிதனின் ஆத்துமாவை ஆக்கினைதீர்ப்புக்கு உட்படுத்திவிடும்!
- ரத்னம்
