பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

20.08.2026                                               34வது வாரம்

ஜெபமில்லா வாழ்வு, நம் பசுமையை வாடச் செய்திடும்!

 ஜெப நேரமே, ஜீவ ஊற்றுக்கண்ணை நெருங்கிச் சேரும் நேரமாகும்.  நான் என்று என் ஜெப நேரத்தை உதாசீனம் செய்தேனோ, அன்றே “ஜீவ ஊற்றுக்கண்ணும்” என்னைவிட்டு பறிபோய்விடும்! இந்த அனுபவத்தை ஒரேயொரு முறைதான் அனுபவித்தாலும், அந்த அனுபவம் ‘தேவனோடு நெருங்கி’ வாழ்ந்த அவனை வாட்டி வதங்கச் செய்துவிடும்! தன் நேசரோடு தங்கி தாபரித்த அழகு திராட்சத்தோட்டத்தின் வேலி சிதையுண்டு, பாதுகாக்கப்பட்டிருந்த அவனது ஆவிக்குரிய திராட்சை கனிகளும் மண்ணில் வீழ்ந்து போவதைக் காண்பான்! 

 முன்பு அவன் தேவனிடத்தில் கண்டடைந்த நிறைவான அன்பையும், ஆறுதலையும் ‘மனுஷரிடத்தில்’ தேட துவங்கிய சோகம் சம்பவித்துவிட்டது! அவன் அவரை விட்டு விட்டப்படியால், தேவனும் அவனை விட்டுவிட்டதைக் காண்பான். இதன் மூலம் ஒரு மாறாத பாடத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அது என்னவெனில், தேவனுடைய பாதத்தை நெருங்கிவரும் ஜெபம் இல்லையென்றால், அந்த ஆத்துமா வாடி வதங்கும் என்ற உண்மையை, உறுதிபட கற்றுக் கொள்வோமாக!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!