நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

17.09.2026 38வது வாரம்
பாவமா? நரகமா? ‘தேவ சமூகம் இல்லாத’ பாவமே கொடியது!

18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த “மேடம் குயான்” அம்மையார் ஒரு சமயம் கூறும்போது “எனக்கு முன்பாய் பாவமும், நரகமும் தரப்பட்டு உனக்கு எது வேண்டும்? என்று கேட்டால், நான் நரகத்தையே தெரிந்து கொள்வேன்!” எனக்கூறினார். ஏன் தெரியுமா? ‘பாவம்’ தேவனுடைய சமூகத்தை என்னைவிட்டுப் பிரித்துவிடும்! ஆனால், நான் பாவம் செய்யாத பரிசுத்த வாழ்க்கையில் இருந்தால், நான் நரகம் சென்றாலும் அங்கே ‘அவர் சமூகம்’ இருக்குமே! எனக்கு அது ஒன்றே போதும்!! ஆம், ‘அவர் சமூகம்’ இருக்கும் நரகமே எனது பாக்கியம்!! என உரைத்தார்.
“தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராய்” மாறிக் கொண்டிருக்கும் இக்கொடிய கடைசி காலத்தில் (2தீமோ.3:4), இடுக்கமான “சிலுவைப் பாதையை” ஜனங்கள் நாடவில்லை! ஜனக்கூட்டத்தின் பின்னால் செல்லும், பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளும் நாடவில்லை! “தாங்கள் விரும்பும் விசாலமான பாதை” சென்று இந்த மண்ணோடு வாழ்ந்து, மண்ணாகவே மாய்ந்திடும் இக்கால சபை மாந்தர்கள் மத்தியில், தேவனோடு நெருங்கிய உறவில் நிலைத்து வாழும் ஏராளமான ஜனங்களை நம் சபைகளில் தேவன் எழுப்புவாராக! ஆமென்!!
- ரத்னம்
