பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


26.11.2026                                              48வது வாரம்

‘சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுப்பதே’ கிறிஸ்துவுக்குள் ஒருமனம்!


 சிலுவையை எடுத்துவருவது, ஒரு மரத்தை தூக்கி வருவதோ, அல்லது ஒரு மேட்டில் ஏறிச்செல்வதோ அல்ல! அங்கே ஏற்கனவே மூன்று சிலுவைகள் உள்ளன. கல்வர்களின் இரண்டு சிலுவைகளுக்கு நடுவில் இயேசு அறையப்பட்ட சிலுவையின் ஸ்தானத்தையே அனைவரும் பெற்றிட வேண்டும்.

 நாம் தேவனுடைய சித்தத்திற்கு முழுவதுமாய் கீழ்படிந்து, அதனிமித்தம் ஏற்படும் எத்தனை துன்பங்களையும் சகித்துக்கொள்ள மனப்பூர்வமாய் தீர்மானிக்கும்போதே ‘நம் சிலுவை’ நமக்கு நியமனம் செய்யப்படுகிறது! தேவனுடைய பரிசுத்தவான்கள் யாவரும் இந்த உண்மையை தங்கள் ஆவியில் நன்கு அறிந்திருப்பார்கள். 

 ஒவ்வொரு சூழ்நிலைக்கும் அடங்கி, முழு இருதயமாய் கீழ்படிய அடியெடுத்து வைக்கும் இவர்களுக்கே “சிலுவை அவர்களின் மன கண்களுக்கு முன்பாக வெளிப்படுகிறது!” 

 கிறிஸ்துவுக்குள் ஒருமனம் என வேதம் கூறுவது உண்மை! ‘அவரோடு சிலுவையில் அறையப்படும் மனப்பூர்வமான விருப்பமே’ நாம் கிறிஸ்துவில் கொண்டிருக்கும் ஒருமனம் ஆகும். ஆகிலும், அவரோடுகூட உயிர்த்தெழுதலையும் நாம் ஒருமனமாய் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், சிலுவைக்குப் பின்னாலிருக்கும் உயிர்த்தெழுதலில்தான், அவரை தரிசிக்கும் சமூகம் மறைந்திருக்கிறது!

- ரத்னம் 


வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!