நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
12.12.2024
50. ஆடை, ஆபரணங்களில் கிறிஸ்தவ சகோதரிகளின் பங்கு!
பக்தியான ஜீவியம் மாத்திரமல்ல, ஒரு சகோதரியின் உடுப்பிலும் ஓர் பக்திக்குரிய வித்தியாசத்தை வெளிப்படுத்தியே “கர்த்தரை பின்பற்ற முடியும்” என்பதை சகோதரிகள் உணர்வது நல்லது!
ஆகிலும், இன்றுள்ள மாயை என்னவென்றால், “நாகரீக பேஷன்” பின்பற்றுவதில் என்ன தவறு? என்ற நமக்குள் எழும்பும் ஓர் ‘பாசாங்கான’ எண்ணம்தான்! இந்த நிலையில்தான், நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்! ஆவிக்குரிய நிலையை விசாரிக்கும் சபையின் போதகர்கள், தேவனுடைய இருதயத்தைப் பாதிக்கும் ஒவ்வொன்றையும் அறிந்திருந்தால், நலமாய் இருக்குமே, என்றே சிந்திக்க வேண்டியுள்ளது! ஏனெனில், இவர்கள் ஸ்திரீகளுக்குரிய மாயையை சரியாய் எடுத்துப் போதிக்கவில்லை என்பது மாத்திரமல்ல, பெண்களின் வசீகர மாயைக்கு, அழகு வர்ணனை தந்து, தூண்டிவிட்டு, தூபம் காட்டுகிறார்கள் என்ற அவல நிலையே பிரசங்க மேடையில் இன்னமும் இருக்கிறது! ஆவிக்குரிய ஒரே ஒரு நல்ல போதகன் ஆலய மேடையில் இருந்திருந்தால், சபையிலுள்ள பெண்கள் நீண்ட தூரம் மாயைக்குள் சென்றிருக்க மாட்டார்கள்! ஏனென்றால், இன்று அனேக கிறிஸ்தவ பெண்மணிகள், பொது ஜனத்தின் அபிப்பிராயங்களை சார்ந்து கொண்டு, “தங்களது நடை, உடை, பாவனை சரிதான்” என அவர்களை எண்ண வைத்துவிட்டது! இவ்வித சந்தேகங்கள் ‘கவர்ச்சியை நாடும் சிந்தை’ என்ற உண்மையை கண்டு, மாயைக்கு முற்றிலும் விலகி நிற்க ஆணித்தரமாய் தீர்மானித்து வாழ, பக்தியை நாடும் கிறிஸ்தவ விசுவாச பெண்கள் முன்வர வேண்டும்!
- ரத்னம்